சென்னப்ப நாயகர் தலை நகர் தந்த தலைமகன்
#மாதரசன் பட்டணம், #சதிரானபட்டணம், #புதுப்பட்டணம், நீலகங்கரையன் பட்டணம் - இதெல்லாம் எங்கே இருக்கு?
வணக்கம். மாதப்பன் என்ற பெயர் இன்றும் பல தமிழர்களுக்கு வழங்கும் பெயர்.
#மதிராஜா, மாதிராஜா கூடூர் என்ற ஊர்கள் இன்னும் நெல்லூர் மாவட்டத்தில் உள்ளன.
முதிராஜா, மூதிராஜா என்பன மாறியிருக்கலாம். புல்லி > பல்லி, நுணா > நணா, ...
#மூத்தரையன்/முத்தரையன் “விருத்தராஜா” என வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என இரா. நாகசாமி
விளக்கி ஒரு கட்டுரை எழுதினார் பல ஆண்டு முன்னர்.
மூதரசர்/முத்தரசர் என்னும் பெயர்கள் தென்னிந்தியாவில் புகழ்பெற்றவை.
வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நாலடியார் ஜைந முனிவர் பாடல்களைத்
தொகுத்து நூலாகச் செய்தோர். சோழருடன் மணவினை புரிந்தோர் முத்தரையர்கள்.
உள்நாட்டு சிற்றரசர்கள் முத்தரரசன்/மூதரசன்கள் கடற்கரையில் வாழ்ந்து வரிவசூலித்தனர் -
கடல்வாணிகத்தைக் கண்காணித்தனர் என்பதற்கு நல்ல சான்று. சுல்கம்/உல்கு
- சுங்கச் சாவடிகளின் மேலாண்மைக்காக வந்திருக்க வேண்டும்.
பாண்டியர்கள் மதுரையில் இருந்து கொற்கை, சோழர்கள் உறையூரில் இருந்து
பூம்புகார், நாகை துறைமுகங்கள், சங்க காலத்தில் வஞ்சி என்னும் தலைநகர்
கருவூரில் இருந்து முசிறி, நறவு, தொண்டி துறைமுகங்களுக்கு சென்றதுபோல,
சங்கம் மருவிய காலத்தில் கர்நாடகத்தில் இருந்து பரவிய முத்தரசர்கள்
காலப்போக்கில் சென்னை, நெல்லூர் போன்ற தூறைமுகங்களை ஆண்டுள்ளனர்
என இப்பெயர்களால் தெரிகிறது.
இன்னும் விரிவாகப் பார்க்கவேண்டும். முத்தரையர்கள் பற்றிய
தொண்டைமண்டலக் கல்வெட்டுகள் - தமிழ், வடமொழி இரண்டு மொழிகளிலும்
பார்த்தால் இன்னும் பல செய்திகள் கிடைக்கும் என நம்புகிறேன்.
2014-ல் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி ‘தி ஹிண்டு’ இதழ்க் கட்டுரை:
Back in 2014, The Hindu article:
Comments
Post a Comment